ஆச்சரியப்பட வைத்த அனுஷ்கா !



                                  வித்தியாசமான தோற்றம் என்பது இதுவரை நடிகர்களுக்கான ஒன்றாகவே இருந்து வந்தது. அதை முதல் முறையாக ஒரு நடிகை மாற்றியிருக்கிறார். இந்தக் காலத்தில் நடிப்பிற்காக தன் அழகான தோற்றத்தை அப்படியே குண்டானப் பெண்ணாக மாற்றி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அனுஷ்கா. பொதுவாகவே நடிகைகளுக்கு ஒரு சில ஆண்டுகள் மட்டுமே மார்க்கெட் உச்சத்தில் இருக்கும். அதன் பின் அவர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார்கள். ஆனால், அனுஷ்கா, த்ரிஷா போன்றோர் நடிக்க வந்து பத்து ஆண்டுகளாகியும் இன்னும் தங்களது மார்க்கெட்டை இழந்து விடாமல் காப்பாற்றி வருகிறார்கள். உடலை ஏற்றுவதையும், இறக்குவதையும் எப்போதுமே நடிகர்கள் செய்வதுதான் வழக்கம். அதை அனுஷ்கா செய்யப் போகிறாரா என இஞ்சி இடுப்பழகி படம் ஆரம்பமான போதே சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஆனால், அந்தப் படத்தின் முதல் பார்வையைப் பார்த்ததும் அப்படிப் பேசியவர்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள். அனுஷ்காவை சக நடிகையான சமந்தா மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். “அனுஷ்கா என்றால் அற்புதம், ஒவ்வொரு ஹீரோயினும் மற்றவர்களை விட தங்களை எப்படி ஹாட் ஆக காட்டிக் கொள்வது என்பதில்தான் முயற்சி எடுப்பார்கள். ஆனால், அதற்கும் மேலும் நம்மால் செய்ய முடியும் என்பது நல்ல விஷயமாகத் தெரிகிறது,” எனப் பாராட்டியுள்ளார். அனுஷ்காவின் தோற்றத்தைப் பற்றிய பேச்சுத்தான் சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url