Type Here to Get Search Results !

சிரிப்பு போலீஸாக மாறிய விஷால் !



                                               ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒரு சென்ட்டிமெண்ட் இருக்கிறது. இயக்குநர் ராஜேஷுக்கும் ஒரு சென்ட்டிமெண்ட் உண்டு. தன் படங்களில் முன்னணி ஹீரோ ஒருவரை ஒரு சீனினில் தலைகாட்ட வைத்தால் அந்தப்படம் வெற்றியடையும் என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை. ராஜேஷின் சிவா மனசுல சக்தி ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் ஆர்யா ஒரு காட்சியில் தலைகாட்டினார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்த மூன்று படங்களும் வெற்றியடைந்தன. நான்காவதாக அவர் இயக்கிய அழகுராஜா படத்தில் அப்படி எந்த ஹீரோவும் கெஸ்ட்ரோலில் நடிக்கவில்லை. அழகுராஜா படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. படத்தின் தோல்விக்கும் தன் சென்ட்டிமெண்ட்டுக்கும் முடிச்சுப்போட்டுப் பார்த்த ராஜேஷ், எதற்கு ரிஸ்க் என்று தற்போது இயக்கி உள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷாலை ஒரு சீனில் தலைகாட்ட வைத்திருக்கிறார். விஎஸ்ஓபி யில்  சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டும் விஷால் போலீஸாக வருகிறார்.  அதாவது, பாயும் புலி படத்தில் சீரியஸ் போலீஸாக நடித்திருக்கும் விஷால் விஎஸ்ஓபி யில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் சிரிப்பு போலீஸாக நடித்திருக்கிறாராம். விஎஸ்ஓபி படத்தின் க்ளைமேக்ஸில் விஷால் சம்பந்தப்பட்ட இந்த காட்சி இடம்பெறுகிறது என்று கேள்வி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad