தனுஷிற்கு ஜோடியானார் வித்யாபாலன் !



                                           பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் வித்யாபாலன் குறிப்பிடத்தக்கவர். இவர் 2003-ல் பாலோ தேகோ என்ற பெங்காலி படத்தில் அறிமுகமானவர். பின்னர் இந்தி, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், மரத்தை சுற்றி டூயட் பாடும் படங்களை விட தனக்கு பெயர் வாங்கித்தரக்கூடிய கதைகளாக தேடிப்பிடித்து நடித்தார் வித்யாபாலன். அதில் சில்க்ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படம் அவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தது. அதன்பிறகு கர்ப்பிணியாக நடித்த கஹானி படமும் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. அதன்பிறகு திருமணம் செய்து கொண்டபோதும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டுதான் வருகிறார் வித்யாபாலன். மேலும், தென்னிந்திய நடிகை சில்க்ஸ்மிதாவின் கதையில் நடித்தபோதும், இதுவரை அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கயிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் அந்த படத்தில் தனுஷ் முதன்முறையாக அண்ணன்-தம்பியாக இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதில் அண்ணனாக நடிக்கும் தனுசுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறாராம். வித்யாபாலன் நாயகியாக நடிப்பதால் அந்த படத்தை தானே தயாரிக்கும் தனுஷ், இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url