அசராத நயன்தாரா !


                                              தன்னைப் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எந்த கவலையும் படாமல், தன் வேலையிலேயே முழு கவனமும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதற்கு, அவருக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான், திருநாள், இது நம்ம ஆளு, காஸ்மோரா என, அம்மணியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கோலிவுட் மட்டுமல்லாமல், தன் தாய்மொழியான மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மம்முட்டி ஜோடியாக, ஒரு புது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். வாரத்துக்கு ஒரு இளம் ஹீரோயின், கோலிவுட்டுக்கு படையெடுத்து வந்தாலும், நயன்தாரா நங்கூரம் போட்டு அமர்ந்திருப்பது, சக நடிகையருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url