இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு : மனைவி, தோழிக்கு ‘நோ’ !




                                            இலங்கை தொடரில் இந்திய வீரர்கள் தங்களுடன் மனைவி, தோழிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக., 12ல் காலேயில் துவங்குகிறது. இதற்கு முன் ஆக., 6 முதல் 8ம் தேதி வரை  கொழும்புவில் நடக்கும் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இத்தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் மனைவி, தோழிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோஹ்லியுடன் அவரது காதலியான ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா செல்ல முடியாது.

                                           இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறியது: இலங்கை செல்லும் இந்திய வீரர்களில் பெரும்பாலனவர்கள் கடந்த ஒரு மாதமாக ஓய்வில் உள்ளனர். வங்கதேச தொடர் முடிந்த பின் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். இதனால் இலங்கை தொடரின் போது வீரர்களின் மனைவிகள், தோழிகளை உடன் அழைத்துச் செல்ல தடை விதிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்திய அணியின் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, இத்தொடரின் பயிற்சி போட்டி முடிந்த பின் தான் இலங்கை செல்வார். முதல் டெஸ்ட் துவங்கும் முன் அணியுடன் இணைந்து கொள்வார். ஏனெனில், தற்போது நடக்கும் ஆஷஸ் தொடரில் ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ ‘டிவி’ சேனலில் வர்ணனை பணிக்கு செல்வதாக முன்னதாகவே பி.சி.சி.ஐ.,க்கு தெரிவித்தார். பின் தான் இலங்கைத் தொடரின் அட்டவணையை நாங்கள் முடிவு செய்தோம். இதனால் ஒப்பந்தப்படி ரவி சாஸ்திரி இங்கிலாந்து சென்றுள்ளார். இவ்வாறு  நிர்வாகி கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url