அமரன்-2 ஆரம்பம்...!



                                                கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த அமரன் படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து அமரன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். அப்போது இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் பேசினார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக இப்படத்திற்கு கார்த்திக் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் சில செய்திகள் வெளியாகின. அதில் எதுவுமே உண்மையில்லை என படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். அமரன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாம். அவற்றிற்கான அனுமதி, பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை தற்போது செய்து வருவதாகவும் அது முடிந்த பின்பே படப்பிடிப்புக்கு போக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் அடுத்த மாதம் கோவாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். வெளிநாடுகளில் படப்பிடிப்பு அதிகம் நடத்த வேண்டி இருப்பதால் அமரன் படம் முடிவடைந்து வெளிவர எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்குள் ராஜேஷ்வர் வேறு ஒரு படத்தையும் இயக்க உள்ளாராம். அந்தப் படத்தில் கார்த்திக் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்கள். இயக்குனர் ராஜேஷ்வருக்கும், கார்த்திக்குக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )