"ஜின்" " டார்லிங் 2" ஆனது !



                                                      பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இயக்கி வரும் படம் ஜின். ரமீஷ் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மெட்ராஸ் கலையரசன் வில்லனாக நடிக்கிறார். ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்கிறார். மூனீஸ்காந்த், காளி வெங்கட், அர்ஜுனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். நண்பர்கள் ஒரு ரிசார்ட்சில் புத்தாண்டை கொண்டாட செல்வார்கள். அவர்களில் ஒருவர் பேய். தான் பேய் என்பது அவருக்கே தெரியாது. ரிசார்ட்சுக்கு சென்றவர்களுக்கு வெவ்வேறு திகில் அனுபவங்கள் கிடைக்கும். 5 பேரில் யாரை பேய் பிடித்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. இந்தப் படத்திற்கு முதலில் ஜின் என்று பெயர் வைத்திருந்தார்கள். இது ஒரு குறிப்பிட்ட மதத்தில் பேயை குறிப்பிடும் சொல். ஆனால் படத்தின் கதைக்கும் அதற்கும் தொடர்பில்லை. என்றாலும் ஜின் என்றால் அது இந்தி பெயர்போல இருப்பதாகவும், டாஸ்மாக் சரக்கின் பெயர் போல இருக்கிறது என்ற சிலர் சொன்னதாலும் தற்போது படத்தின் டைட்டிலை டார்லிங் 2 என்று மாற்றிவிட்டார்கள். டைட்டிலை மாற்றியர் டார்லிங் படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. காரணம் அவர்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url