Type Here to Get Search Results !

வாடகை வீட்டில் குடியேறிய அஜித்..!



                                    சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலும் கோடம்பாக்கத்தைச் சுற்றி உள்ள கே.கே.நகர், சாலிகிராமம் போன்ற ஏரியாக்களில்தான் குடியிருப்பார்கள். காரணம்.. பல சினிமா ஸ்டுடியோக்கள் இந்தப்பகுதியில்தான் உள்ளன. பல ஹீரோக்களும் இந்தப் பகுதியில் குடியிருந்து வந்த நேரத்தில், சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத கொட்டிவாக்கம் ஏரியாவுக்கு குடிபோனவர் அஜித். தொழில் வேறு குடும்ப வாழ்க்கை வேறு என்ற கொள்கை கொண்ட அஜித், அதன் காரணமாகவே கோடம்பாக்கத்தைவிட்டு வெகு தூரம் உள்ள கொட்டிவாக்கத்துக்கு குடிபோனார். அந்த ஏரியாவை அஜித் தேர்வு செய்ய அருகிலேயே கடல் இருப்பதும் இன்னொரு காரணம். கொட்டிவாக்கத்தில் பல வருடங்களாக குடியிருந்து வரும் அஜித், தற்போது குடியிருந்து வரும் வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் பிரம்மாண்டமான பங்களா கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்காக தற்காலிகமாக வீட்டை காலி பண்ணிவிட்டு அடுத்த தெருவில் உள்ள ப்ளாட் ஒன்றில் குடியேறி இருக்கிறார். அதுமட்டுமல்ல அஜித் குடியிருந்த வீடு தற்போது இடிக்கப்பட்டு வருகிறதாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad