Type Here to Get Search Results !

ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரம் சம்மதம் !



                                         2016ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார்.  2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது.

                                           தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். பின்னர் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்டது. இறுதியாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறபட்டது. ஆனால் விக்ரம்  இறுதியாக, 'எந்திரன் 2' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவ்ல் வெளியாகி உள்ளது.. இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.

                                       'எந்திரன் 2' படத்தில் நாயகனாக ரஜினி, வில்லனாக விக்ரம், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad