Type Here to Get Search Results !

"ரஜினி படத்தில் நடிக்கிறார் அர்னால்டு...?!"



                                                 ஹாலிவுட்டின் அதிரடி நடிகர் அர்னால்டு. இவரது நடிப்பில் வெளியான டெர்மினேட்டர் சீரியஸ் படங்கள் உலகளவில் மாபெரும் வெற்றி படங்களாகும். இன்னும் சில தினங்களில் டெர்மினேட்டர் வரிசையின் அடுத்தபடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அர்னால்டு நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர்-ரஜினி கூட்டணியில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது ரஜினி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்தப்படியாக மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். எந்திரன் படத்தை காட்டிலும் இன்னும் பிரமாண்டமாய், புதிய தொழில்நுட்பத்துடன் இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கனவே கமல், அமீர்கான், விக்ரம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்தசூழலில் இப்போது அர்னால்டு, ரஜினியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 2015ம் ஆண்டு துவக்கத்தில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெிளயான ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டும் பங்கேற்றார். அப்போது தமிழ் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் என்றும், குறிப்பாக ஷங்கர் படத்தில் நடிக்க ஆசை என்று மேடையிலேயே தனது விருப்பத்தை தெரிவித்தார். அதன்படி தற்போது ஷங்கர் இயக்கும் எந்திரன்-2வில் ரஜினியுடன் அர்னால்டும் முக்கிய ரோலில் நடிப்பார் என்கிறார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad