Type Here to Get Search Results !

செஸ்: பத்மினி, அபிஜீத் குப்தா சாம்பியன் !






                                                   காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபிஜீத் குப்தா, பத்மினி ராத் சாம்பியன் பட்டம் வென்றனர். டில்லியில் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் முதல் 7 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்தியாவின் அபிஜீத் குப்தா, 8வது சுற்றில் ‘டிரா’ செய்தார். நேற்று நடந்த 9வது மற்றும் கடைசி சுற்றில் இவர், சகவீரர் ஆர்கியாதிப் தாசை சந்தித்தார். இப்போட்டி ‘டிரா’ ஆக, 9 சுற்றில் 8 புள்ளி பெற்ற அபிஜீத் குப்தா சாம்பியன் பட்டம் வென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆர்கியாதிப் (7.5), லலித் பாபு (7.5) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பத்மினி ராத் (7) தங்கம் வென்றார். கடைசி 6 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்ற விஜயலட்சுமி (7), மீனாட்சிக்கு (7) வெள்ளி, வெண்கல பதக்கம் கிடைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad