Type Here to Get Search Results !

ரஜினியின் புதிய படத்தின் பெயர் காளி !



                                            இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு, "காளி" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்தின் தோல்வியை தொடர்ந்து, வழக்கமான பாணியில் இல்லாமல், தனது அடுத்த படத்தை புதுவிதமாக அளிக்க வேண்டும் என்று ரஜினி நினைத்ததன் பலனாக, இளம் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க அவர் தி்ட்டமிட்டார். அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்கள் தொடர்வெற்றி பெற்றதையடுத்து, இயக்குநர் பா.ரஞ்சி்த்திடம் கதையை கேட்டார் ரஜினி. ரஞ்சித் சொன்ன கதை, ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போகவே, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒரு படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றால், ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவார்கள். ஆனால், அந்த வழிமுறையும், ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

                                        ரஞ்சித் தான் இயக்கிய அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் படத்தில் பணியாற்றிய தனது வெற்றிக்குழுவினரையே இதிலும் பயன்படுத்துகிறார். இந்த படத்திற்கும், சந்தோஷ் நாராயணனே இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க நிலையில், படத்திற்கு "காளி" என்று பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, மெட்ராஸ் படத்திற்கு, காளி என்ற பெயரையே, தலைப்பாக வைக்க, ரஞ்சித் திட்டமிட்டிருந்தார். பின், மெட்ராஸ் என்று பெயர் மாற்றம் செய்து படம் வெளியாகி பெரும்வெற்றி பெற்றது. தற்போது ரஜினி நடிக்க உள்ள படத்திற்கும், காளி என்ற பெயரை முன்வைத்து, படப்பணிகள் நடைபெற உள்ளன. 1980ம் ஆண்டில், ஐ.வி. சசி இயக்கத்தில், ரஜினி நடிப்பில் "காளி" படம் வெளியாகி பெரும்வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad