ஏடிஎம்கே பட டைட்டில் மாறுகிறது...!




                                            2014ல் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தற்போது தமிழில் அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, பார்வதி, ராய் லட்சுமி, நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். பாஸ்கர் என்ற புதியவர் இயக்கும் இப்படத்தின் தலைப்பை சுருக்கமாக ஏடிஎம்கே என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே ஆர்யா, சந்தானம் நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்திற்கு விஎஸ்ஓபி என்று சுருக்கமாக பெயர் வைத்திருப்பதை அடுத்து இந்த படத்திற்கு ஏடிஎம்கே என்று ஆளுங்கட்சியின் பெயரில் டைட்டில் வைத்திருக்கின்றனர். இதுவே தற்போது அப்படத்துக்கும் பெரிய பப்ளிசிட்டியாகியிருக்கிறது. ஆனால் இந்த தலைப்பினை படத்துக்கு வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியைச்சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் இதே டைட்டிலில் படம் திரைக்கு வரும்போது ஏதேனும் எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்று அப்படக்குழுவினர் அஞ்சுகிறார்களாம். அதனால் அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் என்ற பெயரிலேயே படத்தை வெளியிட முடிவெடுத்திருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url