தபாங்-3யிலும் ஜோடி சேரும் சல்மான்-சோனாக்ஷி!


                                                        பாலிவுட்டின் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, சல்மான் கான் நடித்த தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல்படமே சல்மான் எனும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார். முதல்படமே அவருக்கு ஹிட்டாக அமைய, தபாங்-2விலும் மீண்டும் சல்மான் உடன் இணைந்தார். அதுவும் ஹிட்டானது. இப்போது தபாங்-3 படத்தை இயக்க இருக்கிறார். இதிலும் இந்த ஜோடி இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சோனாக்ஷி தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதுப்பற்றி சல்மானிடம் சமீபத்தில் கேட்டபோது, தபாங்-3 படத்திலும் சோனாக்ஷி நடிக்கிறார். தபாங் படத்தில் தான் அவர் அறிமுகமானார், அதன் பிறகு அவர் ஒரே இரவில் புகழ்பெற்றார், தாபங்-2விலும் அவர் நடித்தார். அதனால் நிச்சயமாக தபாங்-3யிலும் அவர் இருப்பார் என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )