ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!



                                                கமலின் பாபநாசம் படம் திரைக்கு வந்தபோது சில படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காமல் பின்வாங்கின. அதையடுத்து, பாகுபலி படம் வரும்போது பெரும்பாலான தியேட்டர்களை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டதால், முன்கூட்டியே அறிந்த சில முன்னணி நடிகர்கள் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன. ஆக, இதுபோன்ற பல சூழ்நிலைகளால் ரிலீசில் இருந்து பின்வாங்கிய சில படங்கள் இம்மாதம் 31-ந்தேதி திரைக்கு வர வரிந்து கட்டிநிற்கின்றன. இதில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும் 31-ந் தேதிதான் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ஜெயம்ரவியின் சகலகலா வல்லவன் அப்பாடக்கர், விமலின் மாப்ள சிங்கம், ஆரஞ்சு மிட்டாய், தாக்க தாக்க ஆகிய படங்களும் ஜூலை 31-ந்தேதி வெளியாகயிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சரியான தியேட்டர் கிடைக்காதபட்சத்தில் ஓரிரு படங்கள் பின்வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url