Type Here to Get Search Results !

ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ * போர்ச்சுகல் அணி வெற்றி

                                                                  
                                                                                   ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்த யூரோ கால்பந்து தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி, ஆர்மேனியாவை வீழ்த்தியது.
                                                                                   பிரான்சில் வரும் 2016 ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான ‘ஐ’ பிரிவு தகுதிச் சுற்றில் போர்ச்சுகல், ஆர்மேனியா அணிகள் மோதின.போட்டியின் 14வது நிமிடத்தில் ஆர்மேனிய வீரர் பிஜெல்லி ஒரு கோல் அடிக்க, 29வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் இதற்கு பதிலடி தந்தார் ரொனால்டோ.
தொடர்ந்து அசத்திய இவர் 55, 58 வது நிமிடங்களில் அசத்தி, இப்போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். 62வது நிமிடத்தில் இரண்டாவது முறையாக ‘மஞ்சள் கார்டு’ பெற்ற தியாகோ வெளியேறியதும், 10 வீரர்களுடன் விளையாடியது போர்ச்சுகல்.இந்த வாய்ப்பில் மிகோயன் ஒரு கோல் (71வது நிமிடம்) அடித்த போதும், போர்ச்சுகல் அணி 3–2 என வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad