விஐபி 2 -ன் கதை என்ன? வேல்ராஜ் பதில்






                                                           ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி அதன் வெற்றி, பரபரப்பு, புகழ், இயக்குநர் பதவி எல்லாவற்றையும்  கழற்றிவைத்து விட்டு விஷால் நடிக்கும் பாயும் புலி க்காக மரக்காணம் அருகே கொளுத்தும் வெயிலில் பிரமாண்ட செட்டில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார் வேல்ராஜ். அவரிடம் இயக்குநராகி விட்டு மீண்டும் ஒளிப்பதிவாளராக வேலைபார்ப்பது பற்றிக் கேட்ட போது... இதை  ஒன்றும் நான் டிபிரமோஷனாக நினைக்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஆவது  தான் என் கனவு விருப்பம். இயக்குநரானதே இடையில்தானே? இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் ஒளிப்பதிவாளர் மட்டுமே. ஒளிப்பதிவாளர் பணியில் என்னுள்ளே இருக்கும் இயக்குநர் வெளிப்படவே மாட்டார்.  இயக்குநர் என்கிற விஷயத்தை நான் சுமப்பதில்லை அதை நான் என் தலைக்குள் ஏற்றுவதில்லை. நான் என்றும் ஒளிப்பதிவாளர்தான், இயக்குநர் வாய்ப்பு இடையில் வந்ததுதான் என்றார். விஐபி 2  எந்த நிலையிலுள்ளது என்றபோது விஐபி2 என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர அது முற்றிலும் வேறு கதை. அதற்கும் வேலையில்லா பட்டதாரிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பலரும் விஐபி2என்று சொல்லி வருகிறார்கள். விஐபி2 என்று தான் கேட்கிறார்களே தவிர நான் பார்ட் 2 என்று சொல்ல வில்லையே" என்றார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url