பித்த நோய்களை போக்கும் நெல்லிக்கனி உணவு






தேவையான பொருள்கள் :


  •    நெல்லிக்கனி (தோல் நீக்கியது )  ---  2(அ)3
  •    பசுந்தயிர்  ---   தேவையான அளவு 
  •    காய்ந்த மிளகாய்  ---  2 (அ ) 3
  •    சீரகம்(தூள் )  ---   1/2 டீ ஸ்பூன் 
  •    பச்சை மிளகாய்(காம்பு நீக்கியது ) ---  2
  •    இஞ்சி(தோல் நீக்கியது)  ---  தேவையான அளவு 
  •    கடுகு   ---  சிறிதளவு 
  •    கொத்து மல்லி  ---  தேவையான அளவு 
  •    பெருங்காயத் தூள்  ---  1/2 டீ ஸ்பூன்  
  •    நல்லெண்ணெய்   ---   2 டீ ஸ்பூன் 
  •    உப்பு   ---   சுவைக்கேற்ப 
செய்முறை :


          முதலில் இஞ்சி ,நெல்லிக்காய் ,பச்சை மிளகாய் பொருள்களை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் .ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி  அது காய்ந்தவுடன் ,அதில் 2 டீ ஸ்பூன் விழுதை சேர்த்து பச்சை நிற வாசனை நீங்கி மணம் வரும்பொழுது ,தேவையான உப்பு சேர்த்து அந்தக் கலவையை தயிரில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

         பின்னர் மற்றொரு வாணலியில் 2 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ,சிறிது கடுகு,பெருங்காயம்,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.கடைசியாக கொத்து மல்லி சேர்க்க வேண்டும்.இந்தக் கலவையை ,தயாராகி வைத்துள்ள தயிரில் சேர்த்து ,நண்பகல் சுடு சாதத்துடன் சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள் :

        பித்தத்தால் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் படிப்படியாக குணப்படுத்தும்.நெல்லிகனியில் வைட்டமின்-சி சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகம் blood pressure மற்றும் சிறுநீரகக் கடுப்பு நீங்கும்.பச்சை மிளகாய் ஆன்டி கேன்சர்-ஆக செயல்படும்.இஞ்சி செரிமானக் குறைபாட்டை நீக்கும்.வயிற்றுப் புண்களை ஆற்றும்.

       கொத்து மல்லி வயிற்றுப் பகுதியில் உள்ள உப்புத் தாதுக்களை நீக்கும் .சிறுநீரகம் பலப்படும்.ருசித் தன்மை கூடும்.உப்பானது நாவறட்சியை நீக்கும்.வாய் கசப்புத் தன்மை ,தோல் நிறம் மாறுதல் பித்த மாறுபாட்டால் ஏற்படும். அந்த பித்த நோய்களை குணமாக்கும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url