Type Here to Get Search Results !

அஜித்துடன் மோத நான் ரெடியாகி விட்டேன், நீங்கள் ரெடியா? சவால் விட்ட வில்லன் கபீர்






                                இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
சிவா-அஜித் கூட்டணி அமைக்கும் புதிய படத்துக்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலின் மகள் சுருதிஹாசன் அஜித் ஜோடியாக நடிக்கிறார். தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

படத்தில் வில்லனாக மாடலாக இருந்து நடிகராக மாறிய பாலிவுட் நடிகர் கபீர் துகான் சிங் நடிகிறார்

மேலும், சந்தானம், தம்பி ராமையா ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா இந்த படத்திலும் அஜித்துடன் கை கோர்த்துள்ளார்.

 படத்தின் படபிடிப்பு மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் அஜித்துடன் நடிகர் கபீர் மோதவுள்ளார். இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்து இப்படத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் படப்பிடிப்பு காட்சி ஒன்றை பகிர்ந்து ‘நான் ரெடியாகி விட்டேன், நீங்கள் ரெடியா? என்று அஜித்துடன் மோத ஜாலியாக சவால் விட்டுள்ளார். மேலும், சிவா நீங்கள் உண்மையாகவே சூப்பர் என நெகிழ்ச்சியாக கருத்துக்களை கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad