Type Here to Get Search Results !

கர்ப்பப் பை புண்களை ஆற்றும் கோழிக்கீரை உணவு




தேவையான பொருள்கள் :

  • கோழிக் கீரை ---  அளவுக்கேற்ப 
  • சிறு பருப்பு ---  4(அ)5 டீ ஸ்பூன் 
  • நறுக்கிய வெங்காயம் ---  3
  • நறுக்கிய தக்காளி --- 2
  • பச்சை மிளகாய்(காம்பு நீக்கியது)---  4(அ)5
  • பெருங்காயத் தூள் ---  தேவையான அளவு 
  • மிளகுத் தூள் ---  1/2 டீ ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் ---  1/2 சிட்டிகை 
  • நல்லெண்ணெய் --- தேவையான அளவு 
  • கடுகு ---  சிறிதளவு 
  • காய்ந்த மிளகாய் ---  2
  • கறிவேப்பிலை ---  சிறிதளவு 
  • உப்பு ---   சுவைக்கேற்ப 

செய்முறை :

     முதலில் ஒரு வாணலியில் 200 மில்லி லிட்டர் நீரில் ,சிறுபருப்பு 4(அ ) 5 டீ ஸ்பூன் போட வேண்டும்.நன்கு வேக வைத்த சிருபருப்புடன் கோழிக்கீரையை   சேர்த்து வேக வைக்க வேண்டும்.நன்றாக வெந்தவுடன் ,நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய தக்காளி ,பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து ,ஓரிரு நிமிடங்கள் கொதி வந்த பிறகு 1/2 டீ ஸ்பூன் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்.மஞ்சள் தூள் 1/2 சிட்டிகை சேர்க்க வேண்டும்.இறுதியாக சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.நல்ல பதம் வந்தவுடன் இறக்கவும்.

       மற்றொரு வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து கடுகு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.வாசனைக்காக 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.இவை நன்கு வதங்கியவுடன் ,தயாரித்த பருப்புக் கூட்டில் சேர்க்க வேண்டும்.

    இதை தோசை ,இட்லி மற்றும் சுடு சாதத்துடன் சாப்பிடலாம்.

தீரும் நோய்கள் :

     இது குளிர்ச்சித் தன்மை கொண்டது.கர்ப்பப் பை புண்கள் ஆறும்.வாய்ப் பகுதி புண்கள் ஆறும்.குடல் புண்கள் ஆறும்.இந்த கீரையை 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad