கார்போக அரிசியின் மருத்துவ நன்மைகள்





                               கார்போக அரிசி(பாகுசி)
                                  (Psoralea Corylifolia)

தன்மை 

    சிறு செடிகளான இவை நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது. விதைகள் கருநிறங்கொண்டு ஒருவகை நெடியைத் தரும். குளிர்காலத்தில் விளையும்.இனிப்பு மற்றும் கசப்பு சுவைகள் கொண்டது. பக்குவமாகும் போது கார்ப்புச் சுவை கொண்டது. இரசாயனத் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. உடலுக்கு வலிமையை உண்டாக்கும். சுவையூட்டும். 

மலத்தை வெளித்தள்ளும். வறட்சித் தன்மை கொண்டது. இதயத்தை பலமடையச் செய்யும். தலைமுடி, தோல் முதலியவற்றிக்கு சிறந்தது. இதன் இலை, விதை மருந்தாகப் பயன்படும். 

தீர்க்கும் நோய்கள் 

   கபம், இரத்தபித்தம் குணமாகும். இழுப்பு, குட்டம், நீரிழிவு, காய்ச்சல் மற்றும் கிருமி நோய் போக்கும்.இதன் காய் குட்டம், கபம், வாதம், வாந்தி, இழுப்பு, இருமல், வீக்கம், அஜீரணம் முதலிய நோய்களை குணமாக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url