Type Here to Get Search Results !

பெண்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அரச மரம்





                           அரசமரம் (அச்வத்த)
                             (Ficus Religiosa)

தன்மை :  

               இது அத்தி அல்லது மல்பெர்ரி(முசுக்கட்டைப்பழம்) வகையை சார்ந்தது. இந்த மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.இதன் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,நீண்ட இலைகளானது எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும்.இது பல அரிய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது.குளிர்ச்சிதரக்கூடியது.துவர்ப்புச் சுவை கொண்டதால், இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளித்தள்ளி ஒரு இரத்த சுத்திகரிப்பானாக விளங்குகிறது.

தீர்க்கும் நோய்கள் :

               முத்தோஷ சமனிகளில் பித்தம்,கபம் போன்றவற்றால் ஏற்படும் கோளாறுகளைத் தடுக்கும்.இதன் இலையை மென்று தின்று வர,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் விலகிப் போகும்.அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு ஏற்படும் வெட்டை நோயை குனமாக்கக்கூடியது.வெள்ளைபடுதல் குணமாகும்.

              இதன் பட்டை துவர்ப்புத் தன்மை கொண்டதால் ,Staphylococcus மற்றும் Escherichia coli (ஈகாளி) நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.காயங்கள் மற்றும் தோல் நோய்களுக்கு இதன் இலை அருமருந்தாக பயன்படுகிறது. இதன் பட்டையிலிருந்து தயாரித்த பொடியை நாம் காலை,மாலை எடுத்து வர நீரிழிவு,பேதி,வெள்ளைபடுதல்,மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு  மற்றும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி லேக்சடிவ் ஆக (மலமிலக்கியாக) செயல்படுகிறது.
          
         இந்த அரச மரத்தின் பயன்களைப் பெற்று, அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ்க .
                    


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad