எமி ஜாக்சனைப் பாராட்டிய சமந்தா !





சமந்தா, தெலுங்கு ரசிகர்களை தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் மயக்கியதைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் ரசிகர்களை மயக்க வந்திருக்கிறார்.கத்தி படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு வெற்றிப் படத்தின் மூலம் தன்னை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து விட்டது. தற்போது தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த வாரத்துடன் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு  நடந்து முடிந்துவிட்டது. 

இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்சனுடன் சமந்தா மிகவும் நெருக்கமானத் தோழியாகிவிட்டாராம். கடைசி படப்பிடிப்பு நாளின் போது எமியைப் பற்றி மனதாரப் பாராட்டியிருக்கிறார் சமந்தா.“வெளிநாட்டைச் சேர்ந்தவர் தமிழை அழகாகப் பேசுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவருடன் நடித்தது மிகவும் இனிமையான அனுபவம். அவருடைய தமிழால் மிகவும் அசந்து போனேன், அவர் இன்னும் வளர்வார். தனுஷ், எமி ஆகியோருடன் இனிமையான நாட்களாக படப்பிடிப்பு நகர்ந்தது,” என சமந்தா எமி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url