தனுஷை குறிவைக்கிறதா வாலு டிரெய்லர்?





                                                  வாலு டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே ட்விட்டரில்  ட்ரெண்டானார் சிம்பு.  அதுமட்டுமில்லாமல் டிரெய்லரில் வரும் வசனங்கள் தனுஷை குறிவைக்கிறதா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் மாரி டிரெய்லரில் தனுஷ் , “ நானெல்லாம் தர லோக்கல் என்று வசனங்களை பேசியிருப்பார். அதுபோல வாலு டிரெய்லரில் சிம்பு,  “ நானெல்லாம் எக்ஸ்ட்ரீம் லோக்கல் சார்” என்று சொல்கிறார்.  தனுஷை குறிவைத்தே பதில் வசனங்களை உருவாக்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டுவருகின்றனர்.  அதுமட்டுமில்லாமல், குரைக்கிற நாய் தான் கல்லடி வாங்கும், பதுங்குற புலி தான் ஆள அடிக்கும், சொல்லிவை, அவன்கிட்ட,  தேவையில்லாம என் வழியில குறுக்க வாரான், மவனே கண்டமாயிடுவான்.  என்று தெறி பறக்கும் வசனங்களை பேசியிருக்கிறார். இந்த வசனங்களை ட்விட்டரில் தனுஷை மையப்படுத்தி ட்விட் செய்துவருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.

                                                  “எப்படியிருந்தாலும் வாலு , மாரி இரண்டு படமுமே ஜூலை 17ம் தேதி வெளியாகிறது. அப்போ தெரிந்துவிடும் யாரு தர லோக்கல்? யாரு எக்ஸ்ட்ரீம் லோக்கல்னு ” என்று ரசிகர்களின் கமெண்டுகள் வந்துவிழுகிறது ட்விட்டரில்...


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url