Type Here to Get Search Results !

நடிகர் சங்க தேர்தல் விஷாலுக்கு ஆதரவா? வரலட்சுமி காட்டம்




                                                 நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி மோதுகிறது. இருதரப்பிலும் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியை இந்த மோதலில் சிலர் கோர்த்துவிட்டார்களாம். தந்தைக்கு எதிராக வரலட்சுமி ஆதரவு திரட்டுகிறார். விஷாலுக்கு முழுமையாக ஆதரவு தந்திருக்கிறார் என்று இணைய தளத்தில் சிலர் மெசேஜ் வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணம் விஷால் - வரலட்சுமி நெருங்கிய நண்பர்களாக இருப்பதுதான். இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதை இருவருமே மறுக்கவில்லை.

                                                     இந்நிலையில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். ‘‘முட்டாள் தனமான இப்படியொரு வதந்தியை (நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு) யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதான் ஜர்னலிசமா? நான் எப்போதும் எனது தந்தைக்கு தான் ஆதரவாக இருப்பேன். உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியாவிட்டால் அதுபற்றி எழுத உரிமையும் கிடையாது. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் நான் எப்போதுமே என் தந்தைக்குதான் ஆதரவு’ என குறிப்பிட்டிருக்கிறார்.விஷாலுக்கு தனது ஆதரவு இல்லை என்று வரலட்சுமி கூறி இருப்பது விஷால் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கோடம்பாக்கத்தில் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad