Type Here to Get Search Results !

"அஜித்துடன் கொல்கத்தா செல்லும் ஸ்ருதிஹாசன்!"





                                                     கடந்த ஆண்டு வரை இந்தி, தெலுங்கில் அதிகப்படியான படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன், இந்த ஆண்டு தமிழ், இந்தி படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தமிழில் பூஜை படத்தை அடுத்து தற்போது விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருக்கிறார்.

                                                     அப்படத்தை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 56வது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் இதுவரை தான் நடிக்காத ஒரு டாக்சி டிரைவர் வேடத்தில் அவர் நடிக்கிறாராம். தென்னிந்தியாவில் பெண் டாக்சி டிரைவர்கள் அதிகமாக இல்லாதபோதும் வடஇந்தியாவில் அதிகமானோர் டாக்சி, ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.அந்தவகையில், இந்த படத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், டாக்சி டிரைவராக நடிக்கிறாராம்.

                                           
  

                                                   இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில், அஜித் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்னும் சில தினங்களில் அஜித்-ஸ்ருதிஹாசன் இடம்பெறும் காட்சிகள் படமாகிறது. அதன் சில காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டபோதும், ஸ்ருதிஹாசன் கொல்கத்தா வீதிகளில் டாக்சி ஓட்டிச்செல்லும் காட்சிகள் கொல்கத்தாவிலேயே படமாக உள்ளதாம். அதனால் விரைவில் கொல்கத்தா பறக்கிறது அஜித் டீம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad