பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டம், ஷங்கர், ரஜினி கூட்டணி ?





                                                       இந்தியசினிமா வரலாற்றில் அதிகப்பொருட்செலவு மட்டுமின்றி மிகப்பிரம்மாண்டமாகவும் தயாரான படம் என்று பாகுபலியைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை முறியடிக்கும் வண்ணம் தமிழ்த்திரைப்படம் ஒன்று தயாராகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

                                                      தமிழில் வேறுயார்? இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம்தான் அது என்று சொல்கிறார்கள். இந்தப்படத்தில் ரஜினி தவிர இன்னொரு பெரியநடிகரும் இருக்கிறார் என்றும் அவர்  இந்தியத்திரைப்படங்கள் எதிலும் இதுவரை நடிக்காதவர் என்றும் ஆனால் எல்லோருக்கும் அவரைத் தெரியும் என்றும் சொல்கிறார்கள். அவரிடம் இந்தப்படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் எப்படியும் சம்மதம் சொல்லிவிடுவார் என்றும் இப்போதே சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் இரண்டுகருத்துகள் இருக்கின்றன. அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவும் ஒரு இந்திநடிகையிடம் பேசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை எந்தப்படத்திலும் இல்லாத வகையில் இந்தப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் சம்பளமே சுமார் நூறுகோடியைத் தொடும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப்படத்துக்காக ஒருவரை ஒப்பந்தம் செய்யும்போதே இது சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் படம். அதுவரைக்கும் நீங்கள் இந்தப்படத்தில்தான் இருக்கவேண்டும் என்று சொல்லியே ஒப்பந்தம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.

                                                   இயக்குநரின் ஷங்கருக்கான சம்பளமும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சம்பளம் என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு தெரியுமா? இருபதுகோடி என்று சொல்லப்படுகிறது? இது உண்மையாக இருந்தால் இதுவே பெரிய சாதனைதான்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url