புவியிலுள்ள நிலப்பரப்பில் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறதா?







           நிலப்பரப்புகள்(கண்டங்கள்) மற்றும் பெருங்கடல்கள் புவியின் மேற்பரப்பில் நிலையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நில நகர்வானது வருடத்திற்கு 2-20செ.மீ.(0.75-7.75inch) நகர்ந்து கொண்டு இருக்கிறது.200 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக ,கண்டங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய நிலப்பரப்பைப் பெற்றிருந்தது.ஆனால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு,நிலப்பரப்பு தனித்தனியாக பிரிந்து கண்டங்கள் உருவானது.

          அதில் புவியின் தெற்கு அரைக் கோளமானது 11%-க்கும் அதிகமாக நீர்ப்பரப்பைக் கொண்டுள்ளது.வடக்கு அரைக்கோளத்தில் 65%-க்கும் அதிகமாக நிலப்பரப்பு காணப்படுகிறது.கண்டங்களிலுள்ள நிலப்பரப்புப் பகுதியின் தடிமனானது அதிகபட்சமாக 70கி.மீ வரை உள்ளது.அண்டார்டிக்காவில் 99% நிரந்தர பணிப்படலமாக உள்ளது.ஆனால் தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்படலம் உருகிக் கொண்டே வருகிறது.

நம்பினால் நம்புங்கள் :  புவியின் ஆழமான பகுதி மிகவும் வெப்பமயமானது.ஆனால் தெற்கு ஆப்பிரிக்காவில் மிக ஆழமான இடத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் செயற்கையான முறையில் குளிர்விக்கச் செய்து,அங்கு சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url