Type Here to Get Search Results !

புற்றுநோயை தடுக்கும் கொய்யா பூசணி






புற்றுநோயை தடுக்கும் கொய்யா பூசணி


                             மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா.

இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4

ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு

கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.கொய்யாப்பழத்தை தினமும்

சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து,

நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது

உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய

கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம்

கொண்டவையாகும்.கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘

ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து

போன்றவையும் உள்ளன.

* கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை

கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

* மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை

சாப்பிடலாம்.

* கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து

சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும்.

* ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை

தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால்,

வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.

* மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும்

தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா

இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில்

குணமாகும்.

* ரத்த சோகை இருப்பவர்களும் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால்

பலன் கிடைக்கும்.

* மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட

கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் மது மற்றும்

போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

* கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம்

உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம்

கொண்டவை.

* ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள பொட்டாசியம் அவசியமானது.

கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. எனவே இதனை

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

* கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும்

சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம்.

* கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன்

தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் நீக்காமல் சாப்பிட்டால், முகத்திற்கு

பொலிவும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். மேலும்

முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக வைத்திருக்கும்.

குறிப்பு

* பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாப்பழத்தை இரவில்

சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்று வலி உண்டாகும்.

* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி

சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு

நாளைக்கு 2 கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.

* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை

சாப்பிடக்கூடாது.

பூசணியின் மகத்துவம்: பூசணி கொடியில் காய்க்கும் காய். அதிக செலவு

இல்லாமல் வீட்டு தோட்டத்திலேயே செழிப்பாக வளரக்கூடியது. இதில்

விட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து

போன்றவை நிறைவாக உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம்

ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோய்,

பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவையும் வராமல்

தடுக்கும் தன்மை உள்ளது.பூசணி சாறு சாப்பிடுவதால் இதய நோய் மற்றும்

புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். இதில், பொட்டாசியம் அதிகளவில்

உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad