பங்களாதேஷ்-இந்தியா : 2- நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு.தவான் சதம் அடித்தார்.





         பங்களாதேஷ்க்கும்,இந்தியாவிற்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில்,இரண்டாம் நாளான இன்று மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது.நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 23.3 ஓவர்களில் 107/0  என்ற நல்ல தொடக்கத்தை ஷிகர் தவானும்,முரளி விஜய்யும்  அமைத்து கொடுத்தனர்.மழை குறுக்கிட்டதால் ,முதல் பாதி ஆட்டம் தடைபட்டது. அதன் பின்பு ஷிகர் தவானும்,விஜய்யும் ஜோடி சேர்ந்து 56 ஓவர்களில் 239 ரன்கள் குவித்தனர்.பாதுல்லா ஆடுகளத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற பெருமையை தட்டிச் சென்றனர்.

         பாதுல்லா ஆடுகளத்தில் நடைபெற்ற ஆட்டத்தில்,தவான் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கண்டார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 150 ரன்களுடன் களத்தில் நின்றார்.மழை கொட்டித் தீர்த்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url