Type Here to Get Search Results !

Guattaria Longifolia (அசோக மரம்)






Guattaria Longifolia (அசோக மரம்)

                   அசோகமரத்தில் இருவகைகள் உண்டு. முதாலாவது அழகிய நிழல் தரக்கூடிய மரமாகும். இதன் இலைகள் 18-20 அங்குல நீளமும் 3 அங்குல அகலமும் கொண்டிருக்கும். இலந்துளிராக இருக்கும்போது சிவந்து காணப்படும். மலர்கள் கொத்து கொத்தாகப் பூக்கும். பூக்கும்போது ஆரஞ்சு நிறத்திலும் பிறகு நல்ல சிவப்பு நிறத்திலும் காணப்படும். இளவேனிற்பருவதில் பூக்கும். இதன் காய் சற்று நீண்ட நாவற்பழம் போலிருக்கும். பழுத்த பின் சிவந்து காணப்படும் இதன் பருப்பு துவர்ப்புச்சுவை கொண்டிருக்கும். மற்றொருவகை தேவதாருமரத்தைச் சேர்ந்தது. சிலர் இதை அசோகமெனச் சொல்கின்றனர். மாவிலையைப் போன்ற இலை வெளிறிய மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இந்த வகை மரம் மிகவும் உயர்ந்து வளரும். ஆனால் இதன் தன்மை முன்னையதைவிட குறைந்த ஆற்றல் கொண்டதாகும்

 தன்மை 

        அசோகம் குளுமைத்தன்மை கசப்புசுவையுடையது மலத்தை கட்டும். உடல் நிறத்தை பொலிவுள்ளதாக்கும்.


பயன் 

        இந்தப்பட்டை விதைகள் மருந்துப் பொருளாக பயன்படுத்தபடுகின்றன.

தீர்க்கும் நோய்கள்

         வாதம் முதலிய தோஷங்கள் நாவறட்சி எரிச்சல் கிருமி நோய் இரத்ததோஷம் உடல் உலர்ந்துபோதல் நஞ்சு என்பன வற்றைப்போக்கும்.    
         
                    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad