Type Here to Get Search Results !

போன் தொலைந்தால் கூகுலில் தேடலாம்

       




          ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதலத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும்.
         கூகுள் நிறுவனம் மிகத் திறம் வாய்ந்த தேடுபொறி தளத்துடன் தொழில்நூட்ப உலகில் களம் இறங்கியது. அதன் பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்துபோனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யபட்டு உள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஒரு அப்பிளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக் கொண்டு அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட் போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். பின்னர் எப்போதாவது போன், கணினியை  வைத்த இடம் மறந்து போனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.

         இதற்கு இருந்த இடத்தில இருந்து கொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் 'பைண்டு மை போன் '  (Fi-nd my ph-o-ne) என்று தட்டச்சு செய்தால் போதும். உடனே தொலைந்த ஆண்டிராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது  எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டுவிடும். ஒருவேளை உங்கள் மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் 'ரிங்' என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால்  போனில் உள்ள தகவல்களை அளிக்கவும் செய்யலாம்.
     
        ஆப்பிள் ஐபோன் ஏற்கனவே இது போன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

                    
       
               

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad