Type Here to Get Search Results !

கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் !

கொய்யாவில்  குவிந்திருக்கும்  சத்துகள்  !

                  மலிவாகக்  கிடைக்கக்கூடிய  பழமான  கொய்யாவில்  பல்வேறு சத்துகள்  குவிந்திருக்கின்றன.  இதில்  வைட்டமின்  பி , சி  ஆகிய  உயிர்ச்சத்துக்களும்,  கால்சியம்,  பாச்பரஸ்  போன்ற  தாது  உப்புக்களும்  அடங்கியுள்ளன.
                  மற்ற  பழங்களை  ஒப்பிடும்போது   கொய்யாவில்  வைட்டமின்  சி  அதிகம்  உள்ளதால்,  வளரும்  குழந்தைகளுக்கு  இது   ஒரு  வரப்பிரசாதமாகும்.
                  மலச்சிக்கலால்  அவதிப்படுபவர்கள்  இதை  சாப்பிட்டு  வந்தால்  அப்பிரச்சினையில்  இருந்து  மீளலாம்.
                  இதை  நறுக்கிச்  சாப்பிடுவதை  விட  அப்படியே  சாப்பிடுவதால்  பற்கள்,  ஈறுகள்  வலுவடையும்.
                  இது  செரிமான  உறுப்புகளை  வலிமைப்படுத்தும்  ஆற்றல்  உடையது.  இதை  உண்பதால்  வயிறு,  குடல்,  இரைப்பை,  கல்லீரல்,  மண்ணீரல்  வலுப்பெறும்.
                  ரத்த  சோகை  நோயாளல்  பாதிக்கப்பட்டவர்கள்  கொய்யாவை  உட்கொண்டால்  நல்ல பலன்  கிடைக்கும்.
                  இதில்  உள்ள  லைகோபைன்  மற்றும்  கரோட்டினாய்டுகள்,  புற்றுநோய்க்  கட்டிகளை  குணப்படுத்தும்  தன்மை  கொண்டவை.
                  இதில்  பொட்டாசியம்  சத்து  அதிகம்  உள்ளதால்  ரத்த  அழுத்தத்தை  சீராக  வைத்துக்  கொள்ளலாம்.
                  இதை  தோல்  நீக்கி  சாப்பிடுவதை  விட  தோலுடன்  அப்படியே    சாப்பிடுவது  நல்லது.  இது  முகத்துக்குப்  பொலிவைத்  தருவதுடன்,  தோல்  வறட்சியையும்  நீக்கும்.  
                       

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad