Type Here to Get Search Results !

திருமண வதந்தியில் உண்மை கிடையாது நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு

திருமண வதந்தியில் உண்மை கிடையாது நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு


சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி வருகிறார். 
இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அது காதலாக மாறி விட்டதாகவும்   நயன்தாரா சமீபத்தில் தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் ரகசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு இந்தக்காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிழவியது

நயன்தாராவை போலவே விக்னேஷ் சிவனும் கேரளாவை சேர்ந்த மலையாளி ஆவார். அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ தன்னுடைய பூர்விக கிராமத்துக்கு விக்னேஷ் சிவனை அழைத்து சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு தன் குடும்பத்தினருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு, அங்குள்ள சர்ச்சில் சிறப்பு பூஜையும் செய்து வந்திருக்கிறார்.  கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கபட்டது.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம்  நடந்துள்ளது.  ரகசியமாக இத்திருமணத்தை நடத்தி உள்ளனர் என தகவல் வெளியானது  இந்த திருமணம் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்த தகவலை நயன்தாரா மறுத்தார். ”கடந்த மூன்று மாதங்களாக சொந்த ஊருக்கு கூட போக முடியாத அளவுக்கு நயன்தாரா,  நடித்து வருகிறார். இப்போது அவர், நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கிறார். திருமணம் நடந்ததாக கூறப்படும் 17 தேதியும் அதே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். பின்னர் எப்படி அவர் கொச்சியில் திருமணம் செய்து கொண்டிருக்க முடியும்?”என்று நயன்தாரா தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

 நான் நடிக்கும் படங்களை பற்றி பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. என் சொந்த வாழ்க்கை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை என்று நயன்தாரா கூறியிருக்கிறார்.

 இயக்குநர் விக்னேஷ் சிவன் இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘திருமண வதந்தியில் உண்மை கிடையாது. இதுபோன்ற செய்திகள் வேலையை மட்டுமில்லாமல் தனிப்பட்டமுறையிலும் பாதிக்கிறது' என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad