Type Here to Get Search Results !

அழகும் ஆரோக்கியமும்! ஒரு டிப்ஸ்!

           










             நாற்காலியில் உட்கார்ந்து இரு தோள்களையும் தளரவிடவும் அதே நிலையில் அந்தந்த தோள்களின் மேல் வைத்து கைகளை சுழற்றவும். கழுத்தை நேராக வைத்து கைகளை சுழற்றிக் கொண்டே கழுத்தை இடமாகவும், வலமாகவும் சாய்க்கவும் ஒவ்வொரு புறமும் 10 முறை செய்யவும்.


            முக தசைகளுக்கான பயிற்சி  'ஏ ' என்னும் ஒலியை வேகமாக உச்சரிக்கவும். அதே போன்று 'ஈ ', 'யூ ', மற்றும் 'ஓ' என்னும் ஒலிகளை எழுப்பவும். இப்பொழுது வாயை நன்றாகத் திறந்து உதடுகளை உட்புறம் மடக்கவும். இப்படியே கொஞ்ச நேரம் இருக்கவும். இதை 5 செய்யவும். இப்பொழுது உதடுகளை புன்னைகைப்பது போல் செய்யவும் இதையும் 5 முறை செய்யவும்.


           களைப்பை போக்க அடிக்கடி கண்களை சிமிட்டவும் 5 நொடிகளுக்குப் பிறகு சாதாரண நிலைக்கு மாறவும். 10 முறை இவ்வாறு செய்யவும். இப்பொழுது  கண்களின் ஓரங்களில் மென்மையாக அழுத்தவும். இதனால் களைப்பு நீங்கும்.


            முகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அஷ்ட கோணலாக்கி  மீண்டும் சாதாரண நிலைக்கு மாறவும். இதை ஒரு 10 முறை செய்யவும். இதனால் உங்கள் முகம் ஒரு புதுப் பொலிவையும், அழகையும் பெறும். இப்பொழுது நேராக முன்னால் உள்ளதை பார்க்கவும். வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறந்து வேகமாகப் புன்னைகைத்து பிறகு தளர விடவும் இதனால் உங்கள் முகத்தின் சோர்வு  நீங்கும். நீங்கள் புதிதாய்ப் பூத்த மலர் போன்று அழகாய் காட்சியளிப்பீர்கள்.

     
          விரல்களை நெற்றியின் மீது வைத்து மெதுவாக சுற்றி, சுற்றி நீவி விடவும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். இப்பொழுது நெற்றியின் நடுவில், இரு கைகளின் அடிபுறத்தை வைத்து லேசாக அழுத்தி மேலும் கீழுமாகப் பார்க்கவும். இதை 10 முறை செய்யவும்.


        வாயை  சிறிது திறந்து, மேல் உதட்டை இடது புறம் லேசாக தூக்கவும். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு மாறவும். இதை 5 முறை வலது புறமும் இடப்புறமும் செய்யவும். இதனால் கன்னச்சருமம் செழிப்புறுவதொடு இளமை மாறா அழகுடன் முகம் காட்சியளிக்கும்.



                          

      

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad