Type Here to Get Search Results !

கூகுள் மாப் எப்படி வேலை செய்கிறது












         பயணங்களுக்கு, முன் எப்போதும் இல்லாத வகையில் சிறந்த வழிகாட்டியாக விளங்குவது   கூகுள் மாப். ஒருவர் தான் செல்ல  வேண்டிய  முகவரி மற்றும் வழியை அறிந்து கொள்ள கூகுள் மாப் உதவுகிறது.
                     
                   இணையதளம் வழியாக இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையானது செயற்கை கோள் வரை படங்களாக ஒருவர் தேடும் முகவரியின் இருப்பிடம் மற்றும் வழியை காட்டிவிடுகிறது. இந்த வசதியில் அமெரிக்காவில் உங்கள் உறவினர் வசிக்கும் வீட்டை, இங்கிருந்தபடியே தெளிவாக பார்த்து விட முடியும்.
               
              திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில், நகரங்களின்  செயற்கை கோள் புகைப்படங்களின் இணைப்புடன், சிறிய அளவிலான படமாக சுருக்கப்பட்டு நமது பார்வைக்கு தேடல் முடிவுகள் காட்டப்படுகின்றன. பெரிய அளவிலான தகவல் சேகரிப்பில்,அட்சரேகை,  தீர்கரேகை, முகவரி, தபால்பின்கோடு, ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்கள் தேடப்படுகிறது.
             
              எப்போது நாம் முகவரியை தட்டச்சு செய்கிறோமோ, உடனே அந்த தகவல்கள் கூகுளின் உலக சர்வர் கணினிகளில் தேடப்படுகிறது. நாம்  தட்டச்சு செய்ததற்கு சரியான மற்றும் அதற்கு இணையான தகவல்கள் கண்டறியப்பட்டு திரையில் அந்த இடத்திற்கான வரைபடம் காட்டப்படுகிறது                          
             எங்கிருந்து செல்ல வேண்டுமோ அது 'ஏ ' என்றும், செல்ல வேண்டிய இடம் 'பி ' என்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு காட்டப்படும். இந்த இரு இடங்களுக்கு இடையேயான தூரம் மற்றும் வழிகளையும் அது காட்டும். சில நேரம் நாம் மாற்று  வழியை தேட விரும்பினாலும் சாத்தியமான இதர வழிகளையும் காட்டும்.  








  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad