Type Here to Get Search Results !

அதிகரிக்கும் ஆசிய சிங்கங்கள் !







அதிகரிக்கும்  ஆசிய  சிங்கங்கள் !

           இந்தியாவில்  சிங்கங்களின்  எண்ணிக்கை  கடந்த 5  ஆண்டுகளில்  27  சதவீதம்  அளவில்  உயர்ந்துள்ளது.  சமீபத்தில்  நாட்டில்  நடத்தப்பட்ட  வனவிலங்கு  எண்ணிக்கை  ஆய்வு  ஒன்றில்  இது  தெரியவந்திருக்கிறது.
         
            இப்போது  இந்தியாவில்  523  சிங்கங்கள்  இருப்பதாகக்  கணக்கிடபட்டிருக்கிறது.  குஜராத்தில்  இருக்கும்  கிர்  வனப்  பகுதியில்  மட்டும்  தான்  ஆசிய  சிங்கங்கள்  காணப்படுகின்றன.

             நூறாண்டுகளுக்கு  முன்னர்   சிங்கங்களின்  எண்ணிக்கை  மிக  குறைந்த  அளவிலேயே  இருந்தது.  ஆனால்  சிங்க  வேட்டைக்கு  விதிக்கப்பட்ட  தடை  மற்றும்  பிற  வன  உயிரினப்  பாதுகாப்பு  நடவடிக்கைகளால்  இந்த  அளவுக்கு  ஆரோக்கியமான  எண்ணிக்கை  உருவாகியுள்ளது.

              இரண்டு  ஆண்டுகளுக்கு  முன்னர்    குஜராத்  வனப்  பகுதியில்  இருக்கும்   சிங்கங்களில்  சிலவற்றை  அவற்றின்  பாதுகாப்புக்காக  அண்டை  மாநிலமான  மத்தியபிரதேசத்துக்குக்   கொண்டு செல்ல  சுப்ரீம்  கோர்ட்டு  உத்தரவிட்டது.  ஆனால்  குஜராத்  அரசு  அந்த   உத்தரவுக்கு  எதிராக  மேல்  முறையீடு  செய்ததால்  அந்த   நடவடிக்கை  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

           



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad