Type Here to Get Search Results !

Aqullarla Agallocha [அகில்]



Aqullarla Agallocha
 [அகில்] 

          இது  பெரிய  மரமாக  வளரக்கூடியது .  அகிலில்  நான்கு  வகைகள்  உண்டு.  கிருஷ்ணாகுரு,  காஷ்டாகுரு,  தாஹாகுரு,  மங்கல்யாகுரு  என்பனவாம்.  இவற்றில்    தாஹாகுரு  கூர்ஜா   நாட்டிலும்   மங்கல்யாகுரு  கேதாரநாத்  பகுதியிலும்  வளர்கின்றன.  இவற்றில்   மங்கல்யாகுரு  சிறந்தது.  ஆனால்  பலர்  கருப்பு  அகில்  மஞ்சள்  நிறம்  கொண்ட  அகில்  என  இருவகையே  கொள்கின்றனர்.

பயன்

          இம்மரத்தின்  வேர்க்கட்டை  மருந்தாகப்  பயன்படுகிறது.  மரத்தில்  வெட்டுக்காயம்  பட்ட  பகுதிகளில்   பிசின்  மிகுதியாகக்  காணப்படும். சில   மரத்தின்    பிசின்  கருநிறமாகவும்   சில  மரத்தின்    பிசின்  சாம்பல்  நிறமாகவும்  காணப்படும்.  மரத்தில்  நறுமணமுள்ளதும்  எண்ணெய்ப்பசை  கொண்டதுமான  பகுதி  பயன்படுத்தப்படுகிறது.

தன்மை 

           உஷ்ண  வீரியமும்  கார்ப்புச்  சுவையும்  கசப்புச்  சுவையும்  கொண்டது.  தீஷ்ணமானது .  பித்தத்தை வளர்கக்கூடியது.  உடலில்  தோலுக்கு  நல்ல  நிறம்  தரவல்லது.  கருப்பு  நிறமுள்ள  அகில்  சிறந்த  குணமுள்ளது.


விளைநிலம் 

   
             அஸ்ஸாம்  பகுதியில்  மிகுதியாக   விளைகிறது.

தீர்க்கும்  நோய்கள் 

             காதுநோய்  கண்  நோய்  வாதசீதலம்  கபம் என்பனவற்றைப்  போக்கவல்லது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad