சானியா - மார்ட்டினா ஜோடியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி















                      ஸ்டட்கர்ட் கிராண்ட் ப்ரீ டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்ஸா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வியைடந்து வெளியேறியது. தரவரிசையில் முதலிடம் பிடித்த பின் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே சானியா தோல்வியடைந்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் நகரில் இப்போட்டியின் முதல் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சானியா - ஹிங்கிஸ் ஜோடி குரோஷியாவின் பெட்ரா மார்டிச், லீசெடென்ஸ்டைனின் ஸ்டெபானி வோக்ட் ஜோடியை எதிர் கொண்டது.

மார்ட்டினா ஹிங்கிஸ் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டதால், அவரால் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் சானியா - ஹிங்கிஸ் ஜோடி 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் சானியா - ஹிங்கிஸ் இருவரும் இணைந்து ஆடத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து 14 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்தனர். இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன், சார்லஸ்டென் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இதனால் இந்த ஜோடி இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. தற்போது தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோல்வியைச் சந்தித்துள்ளது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url