ரஜினியை மட்டும் பலோ செய்யும் விஷால்!











                           கோலிவுட்டி நடிகர்களில் சற்று மாறுபட்டவர் விஷால்.

மனதில் என்ன பட்டதோ அதை வெளிப்படையாக சொல்லும் திறமைபடைத்தவர். தற்போது இவர் சுசீந்திரன் இயக்கும் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

பெரும்பாலும் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் நடிகைகள்தான் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். ஆனால் சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த விஷால் கூட ரொம்பவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். உடனுக்குடன் தன் படங்கள் பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடவும் தவறுவதில்லை.

விஷால் டுவிட்டரை இதுநாள் வரை 18ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் விஷாலோ ஒரே ஒருவரை மட்டும்தான் பின் தொடர்கிறார். அவர் வேறுயாமில்லை. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதான். விஷாலுக்கு கோலிவுட்டில் பெரிய நட்பு வட்டாரமே உள்ளது. அப்படியிருக்கையில் அவர் ஏன் ஒருவரை மட்டும் பின் தொடர்கிறார் என்று தெரியவில்லை
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url