தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டொனால்டு விலகல்












                        தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அலன் டொனால்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடந்த 2011–ம் ஆண்டு ஜூன் மாதம் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 48 வயதான டொனால்டு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் ஏதாவது ஒரு வகையில் பணியாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த வாய்ப்பு கிடைத்தது நம்ப முடியாத மிகப்பெரிய கௌரவமாகும்.

எனது வாழ்க்கையில் கடந்த 4 ஆண்டுகள் மிகச்சிறப்பானது. உலகின் சிறந்த பந்து வீச்சு குழுவினருடன் பணியாற்றியது மிகவும் திருப்தி அளித்தது. உலக கோப்பை முடிந்ததும் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன்.

சில மறக்க முடியாத நினைவு மற்றும் அனுபவங்களுடன் இப்பணியில் இருந்து விலகுகிறேன்’ என்று அதில் கூறியுள்ளார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url