மனித திசுக்களின் உதவியுடன் Supermouse உருவாக்கும் முயற்சி!
சுண்டெலிகளில் மனித மூளையின் பிரதான கருக்களை செலுத்தி விசேடவகை (supermouse) எலிகளை உருவாக்கும் முயற்சி Rochester பல்கலைக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் இலக்கு விசேட எலிகளை உருவாக்குவதில்லை என்றும். மாறாக இத்திட்டத்தினூடாக மனித மூளையில் ஏற்படும் நோய்த்தாக்கங்களுக்கான காரணிகளை இலகுவாக கண்டறிய முடியும் என் திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் ஸ்டீவ் கோல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மனித திசுக்கள் செலுத்தப்பட்ட எலிகள் சுறுசுறுப்பாக காணப்படுவதுடன். நினைவுத்தனமை மிக்கனவாகவும் இருப்பதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)