Type Here to Get Search Results !

வாழ்வை புரட்டிப்போடும் Pedophilia எனும் மன நோய்!









                              Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி தமிழ்குளோனில் பார்ப்போம்.

Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தியில் விளிப்புணர்வாக பேசப்பட்டது.
Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும்.
அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.

பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். தன்னைவிட 5 வயதேனும் குறைந்த பிள்ளைகளிடம் தான் தனது முதலாவது உறவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இங்கு நாம் ஒரு விடையக் கருத வேண்டும், தன்னைவிட 5 வயதேனும் குறைந்தவர் என்றால் 5 வயது குறைவானவருடன் தான் உடலுறவு கொள்வார் என நினைப்பது தவறாகும். 50 வயதுள்ள Pedophilia நபர் 5 வயது குழந்தையுடன் கூட உடலுறவு கொள்ளும் ஆர்வத்தை கொண்டிருக்கக்கூடும்!

உண்மையில் இந்த Pedophilia என்பது ஒரு மன நோயாக கருதப்படுகிறது. எனினும் மருத்துவத்தின் இன்னோர் ரீதியாக மாற்று பாலியல் இன்பமாக கருதப்படுகிறது. Pedophilia நோயாளிகள் கண்டிப்பாக மருத்துவரை நாடி மனோரீதியான மேம்பாட்டை பெறுதல் அவசியம். Pedophilia மன நோயாளியாக இருந்தாலும், சிறுவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது உலக அளவில் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

 Pedophilia நோய்த்தாக்கம் பொதுவாக ஆண்களிடையே காணப்படும், எனினும் பெண்களிடையேயும் கணிசமான அளவில் காணப்படுகின்றது.

அவர்களின் பொதுவான நடவடிக்கைககள் :

சிறிவர், சிறுமியருக்கு பாலியல் படங்களை காண்பித்தல்.
தமது உறுப்புக்களை காண்பித்தல் / உணரச்செய்தல்.
தமது அண்டைவீடு, அல்லது உறவினர்களின் குழந்தைகளையே பொதுவாக தமக்கு இரையாக்குவார்கள்.
சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் இனங்காண்பீர்களானால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். நட்பு, உறவு, முகம் கருதி தட்டிக்கழித்தீர்களானால், அவரின் எதிர்காலத்திற்கும் பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பாரிய தாக்கமாக அமையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad