Type Here to Get Search Results !

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாறு !!!



திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன.
துப்பாக்கித் தொழிற்சாலையும், பொன்மலை இரயில்வே பணிமனையும், பொறியியல் கல்லூரியும் இந்நகரின் பிரமாண்டமான சிறப்புகள், தாயுமானவர் வாழ்ந்த பூமி இது.
தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.
1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
சுற்றுலாத் தலங்கள்
மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம்
திருவானைக்கோவில்
முக்கொம்பு
கல்லணை
வயலூர் முருகன் கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்

திருத்தலங்கள்
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
அருள்மிகு உத்தமர் கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad