Type Here to Get Search Results !

அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...









                                             பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கவேமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மூலிகை வைத்தியம். மூலிகை வைத்தியம் என்றதும், எந்த காட்டிற்கு செல்லலாம் என்று யோசிக்க வேண்டாம். இங்கு குறிப்பிட்டுள்ள மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். மேலும் இவை அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள். இவற்றில் சில பொருட்கள் ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால், அக்குளில் பயன்படுத்துவதற்கு முன்னர், இதனை ஒருமுறை கைகளில் சோதித்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அக்குள் கருமையைப் போக்கும் சில வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு சிறிது வெந்தயக் கீரையை தண்ணீர் சேர்த்து அரைத்து, அதனை அக்குளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை செய்து வந்தால், அக்குள் கருமை நாளடைவில் மறைந்துவிடும்.

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

ரோஸ்

ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அக்குளில் அரைத்து தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள்

மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறை சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது.

அதிமதுரம்

அதிமதுர வேரை தண்ணீர் சேர்த்து தேய்த்து, அதனை கருமையாக இருக்கும் அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

வேப்பிலை

சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒரு சிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

பட்டை

பட்டை ஒரு அருமையான நறுமணம் தரும் பொருள். அத்தகைய பட்டையை பொடி செய்து, அதில் பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, அதனை அக்குளில் தடவி, நன்கு காய வைத்து, பின் ஈரமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அக்குள் கருமை போய்விடும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad