சூப்பராக வீட்டு வேலைகள் செய்து அசத்தும் “ரோபோ”






உலகிலேயே முதன் முறையாக மேஜை கடிகாரம் அதாவது அலாரம் வடிவிலான ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
அலாரம் வடிவிலான ஜிபோ(Jibo) என்ற ரோபோவை அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின்(Massachusetts Institute of Technology's) மீடியா லேப் பிரிவை சேர்ந்த டாக்டர் சிந்தியா பிரீசில்(cynthia breazeal) என்பவர் வடிவமைத்துள்ளார்.

வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, Phone Calls, Voicemails போன்றவற்றை வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்துகிறது.

மேலும் வீட்டு உரிமையாளரின் முகத்தை ஸ்கேன்(Scan) செய்து வைத்துள்ளதுடன், அவரின் குரலையும் அடையாளம் தெரிந்து கொண்டு கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.

குறிப்பாக அவர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் தனது குரலில் பதிலும் அளிக்கிறது.

ஏதேனும் விசேஷங்கள் நடந்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அசத்துவதுடன், இனிமையான பாடல்களை பாடி குழந்தைகளை மகிழ்விக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url