வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ?











              சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (the World Health Organization WHO)  அம்மை சாம்பிள்களை(மாதிரிகள்) ஒழித்து விடுங்கள் ( ”to destroy the smallpox virus once and for all” ) என்ற அறிவிப்பை சப்தமில்லாமல் தெரிவித்தது. மனிதர்களுக்கு நோய் வருகிறது அந்த நோய் கிருமிகளை ஆய்வு மையங்களில் எதுக்கு பாதுகாத்து வைக்கனும் ? அதற்கு உலக நாடுகள் சொல்லும் காரணம் திரும்ப அது வேறு வடிவில் தாக்கினால் அவற்றை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு அது அவசியம் என்பது. இது வெளிப்படையாக சொல்லப் படும் கருத்து தான். ஆனால் உண்மையில் வைரஸ் கிருமிகளின் மாதிரிகளை பாதுகாத்து வைத்துக்கொள்வது ஒவ்வோர் நாடும் எதிரி நாட்டின் மேல் ஏவுவதற்குதான்  என்பது மறைக்கப்பட்ட உண்மை. 2014-08-27_180432 வெள்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்படும் சமீபத்திய உயிர் கொள்ளி நோய் “எபோலா” திட்டமிட்டு பரப்பப்பட்டு இருக்கலாம் யார் கண்டது ? தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள் சர்வ சாதாரணமாக ஊடுருவி இருப்பதுவும் அத்தகைய ஒரு சதிகளில் ஒன்றுதான். 80″ களில் முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சின்னம்மைமாதிரிகளை இதுவரை ஒழிக்காததுவும் எதிரி நாடு நம்நாட்டின் மேல் பிரயோகித்தால் என்ன செய்வது? இப்பிடியான வலுவான காரணங்களும் உண்டு. உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா (அப்போதைய) இதே காரணத்திற்காகத்தான் அந்த மாதிரிகளை அழிக்காமல் வைத்து இருந்தன. அப்படியானால் அந்த நாடுகள் மட்டும் தான் மாதிரிகளை வைத்து இருந்தனவா என்றால் அதுவும் இல்லை பெரும் பாலான நாடுகள் அம்மாதிரியான வைரஸ் மாதிரிகளை சேமித்து வைத்து இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் பலப் பல வைரஸ் மாதிரிகள் ஏதோவொரு காரணங்களுக்காக வைக்கப் பட்டிருக்கும். அதிகாரப்பூர்வமான ரெக்கார்டுகள் என்பது கண்கட்டு வித்தைதான். விஞ்ஞானிகள் சொல்வது ஒரு மனிதனின் டி.என்.ஏ மரபியல் கூறுகளை (GENETIC SEQUENCE) அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது [epigenetics !]. அதன் கட்டமைவுகள் மேம்பட்டு கொண்டே செல்கிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டேட்டாவும் அதில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? என்று யோசித்தோமால அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக எகிப்திய மம்மிகளின் உடல் திசுக்களில் இன்னமும் சின்னம்மை கிருமிகள் இருக்கின்றன என ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது. வைரஸ்கள் எவ்வளவு ஆண்டுகாலம் உயிர்ப்புத் தன்மையோடு இருக்கும் என்பதுவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயமாக இருக்கிறது. ஒரு நோய் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் எந்த நோயும் முற்றாக ஒழிக்கப்படவில்லை அந்த கிருமிகள் ஏதோ ஒருவடிவில் ”மோன” நிலையில் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு சுழற்சி திரும்ப திரும்ப வருவது போல அவை மீண்டு எழுவதும் தவிற்க இயலாதது. இன்னொன்றையும் நாம் கவனித்தில் கொண்டால் எவ்வளவுக்கெவ்வளவு நாம் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு ஏதோ ஒரு வடிவத்தில் வைரஸ்கள் தம்மை உருமாற்றிக்கொள்கிறதோ ? ( ! ) என்பதும் சிந்திக்கவேண்டிய விசயம்.



















Next Post Previous Post
No Comment
Add Comment
comment url