ரெய்னாவுக்கு திருமணம்.. மீரட் பெண்ணை கரம்பிடிக்கிறார்








இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 3ம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்திய அணியில் பட்டையை கிளப்பிவரும் சுரேஷ் ரெய்னாவிற்கு 2வது இன்னிங்ஸ் தொடங்கி விட்டது. அதாவது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மணமகள் பெயர் பிரியங்கா சவுத்திரி. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த இவர், தற்போது ஆலந்து நாட்டில் பணிபுரிகிறார்.

இவர் சுரேஷ் ரெய்னா தாயின் நெருங்கிய தோழியின் மகள் ஆவார். குழந்தையாக இருக்கும்போதே இருவரது குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது.

பின்னர் பிரியங்காவின் குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அதன்பிறகு இரு குடும்பத்துக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போனது.

இதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு இருவரது குடும்பத்தினரும் ஒரு விழாவில் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது பிரியங்காவை பெரிய பெண்ணாக பார்த்த ரெய்னாவின் தாய், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு ரெய்னாவும் சம்மதித்து விட்டார்.

ரெய்னா– பிரியங்கா திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 3ம் திகதி டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஹொட்டலில் நடக்கிறது.

உலகக்கிண்ண இறுதிப்போட்டி வருகிற 29ம் திகதி நடக்கிறது. மறுநாள் இந்திய அணி டெல்லி திரும்புகிறது.

3ம் திகதி நடைபெறும் திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சுரேஷ் ரெய்னா ஏற்கனவே நடிகை சுஷ்தி ஹாசன், அனுஷ்கா சர்மா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url