ஆப்பிள் டிவி இந்தியாவில் விலை குறைக்கப்பட்டது
















ஆப்பிள் டிவி சந்தையில் அதிக வரவேற்பு பெற்ற கருவி இல்லை என்றாலும், இதை வாங்கும் திட்டம் நீங்கள் வைத்திருந்தால் இது உங்களுக்கான நேரம் தான். ஆப்பிள் டிவி தற்சமயம் ரூ.5900 க்கு விற்பனை செய்யப்படுகின்றது, மேலும் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் ரூ.5,691க்கு கிடைக்கின்றது.

முன்னதாக ஆப்பிள் டிவி செட் டாப் பாக்ஸ் கருவிகள் ரூ.7000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே, இன்று இதன் விலையானது ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விலை குறைந்த நிலையிலும் கூகுளின் க்ரோம்காஸ்ட் கருவியுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் டிவி விலை அதிகமாகவே இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு அதன் விற்பனைய அதிகமாக்குமா அல்லது தோல்வியை தழுவுமா என்பது கொஞ்ச நாட்களில் தெரிய வரும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url