பளிங்கு முகத்தில் பருக்களா? இந்த உணவை சாப்பிடாதீர்கள்








பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன.
என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பருக்கள் உங்களை அசிங்கப்படுத்துகின்றது என்ற கவலையில் இருக்கும் நீங்கள் செயற்கை மருத்துகளை தவிர்த்து, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதால் பருக்கள் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால் பருக்கள் அதிகம்  வருகிறது.


காபி

சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக்கச் செய்வது தான் காப்பைன். இது சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும்.

மேலும் நிம்மதியான தூக்கத்தையும் இது கெடுத்து விடுவதால் பாதிப்படைந்த திசுக்களை சரிசெய்ய உடலுக்கு நேரம் கிடைப்பதில்லை.

ஆகவே பருக்கள் வரத் தொடங்கினால், நன்றாக தூங்கத் தொடங்குங்கள். இது பருக்களின் வளர்ச்சியை இன்னும் மோசமாகாமல் தடுக்கும்.



சொக்லேட்

பருக்கள் வருவதற்கு சொக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது சொக்லெட்டில் பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ளது.

இவை மூன்றுமே பருக்கள் உருவாக காரணமாக இருக்கும் பொருட்கள், அதனால் இதனை அளவாக சாப்பிடுங்கள்.
எண்ணெய் உணவுகள்

எண்ணெய் பசையுள்ள உணவுகளும், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளும் நல்லதல்ல.

அதிக அளவில் கொழுப்பை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இது பருக்களை உண்டாக்கும்.

இரண்டாவதாக அதிக அளவில் கொழுப்பு நிறைந்த பொருட்களை உட்கொண்டால், இரத்த ஓட்டம் தடைப்படும். அதனால் உடலில் உள்ள பாகங்களுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்துக்களும் குறையத் தொடங்கும், இதில் சருமமும் அடங்கும்.எனர்ஜி பானங்கள்

மன அழுத்த ஹார்மோன்களை இவைகளும் சுரக்கச் செய்யும். இது சருமத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் சர்க்கரை கலந்த சோடா மற்றும் எனர்ஜி பானங்களில் காஃப்பைன் கலந்துள்ளது. அதனால் இதனை அதிகமாக பருகினால், பருக்கள் வரத் தொடங்கும்.
மாமிசம்

அதிக அளவில் இறைச்சியை உண்ணும் போது, அவை பருக்கள் உருவாக காரணமாக அமையும்.

மேலும் இறைச்சி சாப்பிடுவதால் உடலில் உள்ள அமிலக்காரக் குறியீடு இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக உயர்த்திவிடும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url